மினி பஸ் டிரைவர் மர்ம சாவு
திருமங்கலம் அருகே மினிபஸ் டிரைவர் மர்மமான நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே மினிபஸ் டிரைவர் மர்மமான நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர்
திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுக்குமேல் ஆகிறது. இவருடைய மனைவி ஹரிணி. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று காலை இவர் திருமங்கலம் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால் மனைவி ஹரிணி ரமேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஹரிணி தனது உறவினர்களிடம் ரமேஷ் எங்கே இருக்கிறார் எனக்குத் தெரியவில்லை திருமங்கலத்தில் இருந்தால் அழைத்துவரும்படி கூறினார். உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
தகவல்
இந்த நிலையில் நேற்று காலை திருமங்கலம் வடகரை சாலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயத்துடன் மர்மமான நிலையில் பிணமாக கிடப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மினிபஸ் டிரைவர் ரமேஷ் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் ரமேஷ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உடலைப் பார்த்து மனைவி ஹரிணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story