மனைவியை கழுத்தை நெரித்து கொலை


மனைவியை கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 1:52 AM IST (Updated: 14 Nov 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

பாலமேடு அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அலங்காநல்லூர், 
பாலமேடு அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அடிக்கடி தகராறு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சத்திர வெள் ளாளபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது30). போர் வெல் வண்டி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (27). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாகிறது. 
2 பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் - மனைவி 2 பேருக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று  தகராறு முற்றியதில், கலைவாணியை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்த அழகர்சாமி  வீட்டில் தூக்கில் தொங்கியதுபோல் கட்டி தொங்க விட்டு கதவை மூடிவிட்டு சென்றுவிட்டார். இதுபற்றி பாலமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கைது
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இநத்நிலையில் அழகர்சாமி பாலமேடு காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் சாமியை கைது செய்தனர். 
பரபரப்பு
 இறந்துபோன கலைவாணியின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. கணவனே, மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story