மதுராந்தகம் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு


மதுராந்தகம் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 6:08 PM IST (Updated: 14 Nov 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஈசூர் -வள்ளிபுரம் மதுராந்தகம் -திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள தடுப்பணை அருகிலுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்த பாலம் ஏற்கனவே பழுதடைந்து உள்ளதால் வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. தற்போது இங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் பாலத்தின் நடுவில் சென்று தண்ணீரை பார்த்து வருகின்றனர்.

உடனடியாக பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story