குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர்வெள்ளப்பெருக்கு
குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர்வெள்ளப்பெருக்கு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் மிகவும பிரசித்திபெற்ற குரங்கு (கவியருவி) நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வதுவழக்கம்.
இந்த நிலையில், ஆழியாறு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து, சுற்றுலா பயணிகள் நலன் கருதிகடந்த 10 நாட்களாக நீர்வீழ்ச்சியில் குளிக்க சுறறுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
நேற்று எதிர்பாராதவிதமாக குரங்குநீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு காலவரையின்றி தடை விதித்துவனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடை விபரம் தெரியாமல்வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் வாகனங்களில்திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story