பொள்ளாச்சியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
பொள்ளாச்சியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 14 Nov 2021 8:57 PM IST (Updated: 14 Nov 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா 2-வது அலையில்கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பொள்ளாச்சி நகரில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை. 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஒருவர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 2 பேர் எனமொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் யாரும்பாதிக்கப்படவில்லை.
கொரோனா பரவல் மிகவும் குறைந்து இருந்தாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற செயல்களையும், 

அரசின் விதிமுறைகளையும்பொதுமக்கள் கைவிடாமல் முழுமையாககடைப்பிடிக்க வேண்டும் என, சுகாதாரத் துறையினர், வருவாய்துறையினர்பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

Next Story