லாரியை கடத்தி சென்ற கர்நாடக வாலிபர் கைது
லாரியை கடத்தி சென்ற கர்நாடக வாலிபர் கைது
மதுரை,
மதுரை-காளவாசல் பைபாஸ் சாலையில் மத்திய நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 44) என்பவர் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றுவதற்காக லாரியை சேமிப்பு கிடங்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கிடையே அந்த லாரியை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடினர். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் லாரியை கடத்தி செல்வது தெரியவந்தது. மேலும், லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியின் மூலம் லாரி தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து லாரியை மீட்டனர். மேலும், லாரியை கடத்தி சென்ற கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை ராம்சாகர் பகுதியை சேர்ந்த ராம ரெட்டி (37) என்பவரையும் கைது செய்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் லாரியை போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story