கிணற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு
கிணற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு
திருமங்கலம்,
உசிலம்பட்டி அருகே உள்ள கொப்புலிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (25). சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ராஜேஸ்வரி திருமங்கலம் செங்குலத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜேஸ்வரி கீழ உரப்பனூர் பகுதியில் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ராஜேஸ்வரியை மீட்டனர். இதையடுத்து அவர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story