பழுதான குடிநீர் குழாய்
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் பழுதாகி பயன்படவில்லை.
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக பிளாஸ்டிக் தொட்டியில் 4 குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 1 குடிநீர் குழாய் மட்டும் தண்ணீர் பிடிக்க பயன்படுகிறது. மீதம் உள்ள 3 குழாய்கள் பழுதாகி பயன்படவில்லை. மேலும் அந்த குடிநீர் தொட்டியை சுற்றிலும் செடிகள் முளைத்து இருப்பதுடன் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் பிடிக்க பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள செடி மற்றும் மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், பழுதாகி உள்ள 3 குடிநீர் குழாய்களையும் சரி செய்து கொடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story