குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்


குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 15 Nov 2021 7:32 PM IST (Updated: 15 Nov 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.

தேனி: 


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மக்கள் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் ஆகியவை சார்பில் குழந்தை திருமணதடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது குழந்தைகளின் நண்பர்கள் ஆவோம் என்ற நோக்கத்தில் ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டருக்கு குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி விட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் முரளிதரன் கூறுகையில், ‘குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன’ என்றார்.


Next Story