கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அதில் மனு கொடுப்பதற்காக அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது கல்லூரியில் அனைத்து பாடங்களையும் ஆன்லைன் முறையில் தான் கற்று கொடுத்தனர். உள்தேர்வுகளை கூட ஆன்லைனில் தான் நடத்தினர். ஆனால் இப்போது செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பு அனைத்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கலெக்டர் தலையீட்டு இந்த செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story