மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
மதுரை
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பியும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து மாவட்டம் முழுவதும் மழை நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வதற்காக தனி விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட செயலாளர் மணிமாறன், நிர்வாகிகள் பாண்டி, பி.எஸ்.என்.எல்.செல்வம், வெற்றி, ஜெயக்குமார், ஆலங்குளம் செல்வம் மற்றும் பலர் வரவேற்றனர்.
அப்போது முதல்-அமைச்சரிடம் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் மனு ஒன்றை கொடுத்தார். அதில் வருகிற மார்ச் மாதம் பாடகர் டி.எம்.எஸ்.சவுந்தரராஜனுக்கு 100-வது பிறந்த நாள் வருகிறது. அதையொட்டி அவருக்கு மகால் பகுதியில் அவரது சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் முதல்-அமைச்சர் கார் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story