வீட்டின் மீது மண்எண்ணெய் பாட்டில் குண்டு வீசிய 4 பேர் கைது

சமயநல்லூர் அருகே முன்விரோதத்தில் வீ்ட்டின் மீது மண்எண்ணெய் பாட்டில் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே முன்விரோதத்தில் வீ்ட்டின் மீது மண்எண்ணெய் பாட்டில் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாட்டில் வீச்சு
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் பாண்டி(வயது 27). இவர் அங்குள்ள ஓட்டலில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவர் கிராம மந்தையில் திறந்த வெளியில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டித்தார்.
இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அந்த வாலிபர்கள், பீர் பாட்டிலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தினேஷ்பாண்டி வீட்டின் மீது எரிந்தனர்.
4 பேர் கைது
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது சம்பந்தமாக தினேஷ்பாண்டி கொடுத்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து புல்லூத்து சூர்யா(19), பன்னியான் அஜய்(19), வாகைகுளம் பார்த்தசாரதி(19), ஊர்மெச்சிகுளம் சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






