எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Nov 2021 2:33 AM IST (Updated: 16 Nov 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை
பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை எல்லீஸ்நகர் துணை மின்நிலையத்தில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எல்லீஸ் நகர், மகபூப்பாளையம் அன்சாரி நகர் 1-வது தெரு முதல் ஏழாவது தெரு வரை, டி.பி.கே.ரோடு, ெரயில்வே காலனி, கென்னட் ஆஸ்பத்திரி பகுதி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெரு, போடி லைன், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர். 
ஆண்டாள்புரம் அக்ரினி அபார்ட்மெண்டஸ், திடீர் நகர், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். மேல வெளிவீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு மற்றும் மேலமாசி வீதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
கூடல் நகர்
மேலும் ஆனையூர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், வி.எம்.டபிள்யூ.காலனி, ெரயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 13 வரை உள்ள தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர், ஜெ.ஜெ.நகர், சஞ்சீவி நகர்,  சாந்தி நகர், பாசிங்காபுரம்,வாகைக்குளம், பாப்பாகுடி கோவில் பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். 
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு ெதரிவித்துள்ளார்.

Next Story