கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியது: உபரி நீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது
அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது.
அந்தியூர்
அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதால் உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது.
உபரிநீர் வெளியேற்றம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது.
இதன் மொத்த நீர்மட்டம் 17.50 அடி ஆகும். மழை மற்றும் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் காரணமாக கெட்டிசமுத்திரம் ஏரி நேற்று முன்தினம் காலை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
வாழை தோட்டங்களில்...
இதனால் உபரி நீரும், மழைநீரும் சேர்ந்து ஏரியின் அருகே உள்ள வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. வடியாமல் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘எங்கள் தோட்டங்களில் நேந்திரம், கதலி, ரொபஸ்டா, செவ்வாழை போன்ற வாழைகள் சாகுபடி செய்துள்ளோம். இவற்றை இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய இருந்தோம்.
கோரிக்கை
இந்த நிலையில் தொடர் மழையால் கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மழைநீரும் சேர்ந்ததால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து நிற்கிறது. இதனால் வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டங்கள் அருகே உள்ள நீரோடைகளில் பரிசலில் சென்று அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறோம்' என்றனர்.
Related Tags :
Next Story