புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Nov 2021 2:58 AM IST (Updated: 16 Nov 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

 தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே உள்ள ரோட்டின் வழியாக அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் விபத்து ஏற்படாமல் இருக்கத்தான் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால் தடுப்பு சுவர் உடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே தடுப்பு சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கெட்டிசமுத்திரம்.

குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு தெப்பக்குளம் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. அந்த வழியாக நடந்து செல்லும்போது ஒருவித நாற்றம் வீசுகிறது. எனவே சுகாதார நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு

பணியை தொடங்குவது எப்போது? 
சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சாக்கடை வடிகால் அமைக்கும்  பணியை தொடங்கியது. ஆனால் இந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.  உடனே சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்

தேங்கி நிற்கும் கழிவுநீர்
சத்தியமங்கலம் அருகே உள்ள சின்ன நாட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது அனுப்பர்பாளையம் கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகால் அமைக்க  ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்கள், அனுப்பர்பாளையம்.

அப்புறப்படுத்த வேண்டும்
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் எதிரே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே அந்த இடத்தில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரா.சதீஷ் கமல், கிருஷ்ணம்பாளையம் காலனி.

தார்சாலை அமைக்கப்படுமா?
கோபி அருகே பெறுமுகை கிராமத்துக்கு உள்பட்டது சி.கே.கே.நகர். இந்த பகுதியில் சாக்கடை வசதி, சாலை வசதி சரிவர இல்லை. ஆகவே சாக்கடை வடிகால் கட்டவும், தார்சாலை அமைக்கவும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நவீன், சி.கே.கே.நகர், கள்ளிப்பட்டி.

மரக்கிளை அகற்றப்படுமா? 
ஈரோடு ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் மெயின் வீதியில் மின்சார கம்பிகளை உரசி செல்லும் மரத்தின் கிளை வெட்டப்பட்டது. ஆனால் சரியாக அகற்றப்படாததால் மரக்கிளை மின்சார கம்பிகளுக்கு கீழே செல்லும் கேபிள் ஒயரில் சிக்கி சாய்ந்தபடி காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் மீது ஒயர் பட்டு பேராபத்து ஏற்படலாம். எனவே மரக்கிளையை சரியாக வெட்டி அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை, லட்சுமி கார்டன் மெயின் வீதி, கே.கே.நகர்.


Next Story