நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்


நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணிஇடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Nov 2021 2:58 AM IST (Updated: 16 Nov 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணிஇடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

நம்பியூர்
நம்பியூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணிஇடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
2 பேர் கைது
நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் தன்னுடைய விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி (வயது 50) என்பவரை அணுகியுள்ளார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் ரத்தினசாமி புகார் அளித்தார். 
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜியிடம் ரத்தினசாமி கொடுத்தார். உடனே அங்கு மறைந்திருந்த போலீசார் ராம்ஜியை கைது செய்தார்கள். 
சோதனை
ராம்ஜியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் லஞ்சம் வாங்க நம்பியூர்  துணை தாசில்தார் அழகேசன் உடந்தையாக இருந்ததும், அதற்கு இடைத்தரகராக முத்துக்குமார் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அழகேசன் மற்றும் முத்துக்குமாரை கைது செய்தார்கள். 
மேலும் அந்தியூர் ஏ.எஸ்.எம். நகரில் உள்ள துணை தாசில்தார் அழகேசன் வீட்டில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணிஇடை நீக்கம்
இந்தநிலையில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கைதான கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி, துணை தாசில்தார் அழகேசன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

Next Story