புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு சொந்தமான மண் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண் வெட்டி எடுத்து கடத்தி செல்லப்பட்டது.
நூற்பாலை நிர்வாகத்தினர் மண் வெட்டி கடத்தி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு அப்பகுதி பொதுமக்கள் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியை கைவிட்டனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதுகுறித்து விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மண் கடத்தியதாக நூற்பாலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்கள், 3 லாரிகள், 3 டிராக்டர்கள் உள்ளிட்ட 9 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு் சென்று நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story