காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா
x
தினத்தந்தி 16 Nov 2021 11:44 AM GMT (Updated: 16 Nov 2021 11:44 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

குழந்தைகள் - நண்பர்கள் வார கொண்டாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து சைல்டு லைன் 1098 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக நவம்பர் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை குழந்தைகள் - நண்பர்கள் வார கொண்டாட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்த தடுப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழாவை தொடங்கி வைத்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு, குழந்தைகள் கைகாப்பு அணிவித்தனர். பின்னர், குழந்தைகள் தின வாழ்த்து அட்டையை மாவட்ட கலெக்டர் குழந்தைகளிடம் வழங்கினார்.

குழந்தைகளுக்கு இனிப்பு

பின்பு விழிப்புணர்வு பதாகையை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் வெளியிட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், சைல்டு லைன் 1098 இயக்குனர் பிரேம் ஆனந்த் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், மைய ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரபு மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் தினத்தையொட்டி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், சைல்டு ஹெல்ப் லைனுடன் இணைந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.

மேலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து உடனடியாக காஞ்சீபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 044-27236111 மற்றும் சைல்டு ஹெல்ப் லைமன் 1098 தொடர்பு கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.


Next Story