மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏமாவதி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற ஏமாவதி தனது 2 குழந்தைகளுடன் சென்னை தியாகராயநகரில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஏக்கத்தில் சீனிவாசன் திடீரென தன் அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோல், திருவள்ளூரை அடுத்த ஆவடி கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஜஸ்விதா (3), சியாம் (2) ஆகிய ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா கோபித்துக்கொண்டு கூவத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பவித்ரா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story