சேதமடைந்த கோசந்திர ஓடை பாலம்


சேதமடைந்த கோசந்திர ஓடை பாலம்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:03 PM IST (Updated: 16 Nov 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோசந்திர ஓடை பாலம் சேதம் அடைந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கம்பம்: 

கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தேக்கடி, வாகமன் போன்ற சுற்றுலா தலங்களுக்கும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் கோசந்திர ஓடை பாலம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழைக்கு இந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதில் பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பாலம் சேதம் அடைந்தது. தற்போது அந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வேகமாக செல்லும்போது பாலம் சேதமடைந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story