வெள்ளாளபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கடத்தூர்
வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு
கோபி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோபி பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டைகளை சென்றடைகிறது.
இந்த நிலையில் கோபியை அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து படர்ந்து வளர்ந்து உள்ளன.
இதனால் நீர் வழித்தடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓட முடியாமல் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக மழை நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது.
கோரிக்கை
மேலும் அந்த பகுதியில் உள்ள குளத்தில் கழிவு நீர் கலப்பதுடன், மழை நீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குளத்தில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story