ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்
கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் சாலை மறியல்
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை மூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே விளாச்சேரி செல்லும் சாலையில் நேற்று 2 தனியார் கல்லூரியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களுக்கு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் மதுரை-திருமங்கலம் செல்லும் சாலை மற்றும் மதுரை-விளாச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பரபரப்பு
இதை அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு கூறினர். அப்போது மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஆன்லைன் மூலம் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டது. மேலும் உள் தேர்வுகளையும் கூட ஆன்லைனில் நடத்தினார்கள்.
ஆனால் தற்போது செமஸ்டர் தேர்வை நேரடியாக எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளனர். நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பு வரும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென்று கல்லூரி வாசலில் முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து மறுபடியும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த நிலையில் மாணவ-மாணவிகள் அனைவரும் மதுரை கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்து சென்றனர்.
Related Tags :
Next Story