கர்ப்பிணி தற்கொலை


கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2021 2:29 AM IST (Updated: 17 Nov 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 24). விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கும் மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி அரியூர்பட்டியை சேர்ந்த அழகர் மகள் நாச்சகண்ணு (19) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாச்சகண்ணு தற்போது கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நாச்சகண்ணு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story