புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Nov 2021 2:37 AM IST (Updated: 17 Nov 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குண்டும், குழியுமான சாலை
 ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாலமுருகன், ஆர்.எஸ்.மங்கலம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
  மதுரை மாவட்டம்  பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொட்டியை தாண்டியும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து செல்கின்றனர். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ராஜலட்சுமி, மதுரை.
கூடுதல் பஸ்வசதி 
மதுரைபெரியார் பஸ் நிலையத்தில் இருந்து  தாதக்கவுண்டன்பட்டி பஸ் நிறுத்ததிற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும். 
அருண், தாதக்கவுண்டன்பட்டி.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜீவா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?  
முத்து சரவணன், காரைக்குடி.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் முடக்காத்தான் அம்பேத்கர் நகர் பகுதியில் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
ஆனந்தன், மதுரை.
கீழடியில் விரைவு பஸ்கள் நிற்குமா?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  கீழடிக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் விரைவு பஸ்கள் கீழடியில் நிற்பதில்லை. இயக்ககூடிய பஸ்கள் இங்கு நிற்காமல் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் கீழடியில் நின்று செல்ல வேண்டும். 
பாண்டியராஜன், பசியாபுரம். 
தொற்றுநோய் பரவும் அபாயம் 
சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை ஊராட்சி சண்முகநாதபுரம் கிராமத்தில் உள்ள் பெருமாள் வீதியில்  மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக சிரமத்துடன் தான் பொதுமக்கள் செல்கின்றனர். மேலும் ெதாற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும். 
கணேஷ்மூர்த்தி,தேவகோட்டை.
தேங்கி கிடக்கும் குப்பை                       
 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் சார்பதிவாளர் அலுவலக நுழைவுவாயில் அருகில் குப்பைகள் அதிகஅளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்ைக எடுக்கவேண்டும். 
ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.

Next Story