நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகை போராட்டம்


நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:15 PM IST (Updated: 17 Nov 2021 4:15 PM IST)
t-max-icont-min-icon

நிலுவை ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 250 தற்காலிக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு, வீடாக கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுகிறதா, சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா, தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் தலா 5 முறைக்கு மேல் கணக்கெடுப்பு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தங்களுக்கு சம்பளம் முழுவதுமாக வழங்கவில்லை என்றும், குறிப்பாக 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி தற்காலிக சுகாதார பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் லட்சுமி, 15 நாட்களில் தங்கள் பணத்தை அளிப்பதாக கூறியதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story