கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை: மண் சரிவால் மரம் ரோட்டில் விழுந்தது


கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை: மண் சரிவால் மரம் ரோட்டில் விழுந்தது
x
தினத்தந்தி 17 Nov 2021 10:59 PM IST (Updated: 17 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர் மழையால் கடம்பூர் அருகே உள்ள ஒரு வளைவில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் ரோட்டோரத்தில் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக அந்த வழியாக கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர், போலீசார், நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தன. மண் சரிவால் கடம்பூர் - சத்தி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மேலும் கடம்பூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட மல்லியம்மன் துர்கம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் ரோட்டில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த திடீர் மழையால் வனப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
திடீர் அருவி
ேமலும் இந்த மழையால் கடம்பூர் செல்லும் வழியில் உள்ள மல்லியம்மன் கோவில், இரட்டைபாலம், போன் பாறை, இடுக்கு பாறை, தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவி தோன்றியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் எடுத்து சென்றனர்.

Related Tags :
Next Story