சிறுத்தை தாக்கி ஆடு பலி


சிறுத்தை தாக்கி ஆடு பலி
x
தினத்தந்தி 17 Nov 2021 11:30 PM IST (Updated: 17 Nov 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

சத்தி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியானது

சத்தி அருகே உள்ள வரதம்பாளையம் மாகாளியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். விவசாயி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலை ஆடுகள் கட்டப்பட்டு இருந்த இடத்துக்கு வந்து பார்த்தார். அப்போது ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தது. அருகே சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகியிருந்தன. இதுபற்றி உடனே சத்தி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனவர் பெர்னார்ட் வன ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். பதிவாகியிருந்த கால்தடங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தைதான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தார்கள். ஆடுகள் இங்கு இருப்பதை சிறுத்தை தெரிந்துகொண்டதால் மீண்டும் அங்கு வரலாம் என்று கூறிய வனத்துறையினர் அதை கண்காணிக்க அந்த பகுதியில் கேமரா பொருத்தினார்கள்.

Next Story