அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து தங்களது விரதத்தை தொடங்குவது வழக்கம். அவர்கள் கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்குவார்கள். கொரோனா பரவல் சற்று குறைந்து இருப்பதால், சபரிமலையில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு தங்களது விரதத்தை தொடங்கினார்கள். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அய்யப்ப சாமியை தரிசனம் செய்துவிட்டு மாலை அணிந்து கொண்டார்கள். இதையொட்டி அய்யப்பன் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story