வெவ்வேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் பலி
உசிலம்பட்டி
வெவ்வேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
தவறி விழுந்தார்
உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன பாலார்பட்டியை சேர்ந்தவர் கருப்பத்தேவர் (வயது 75). இவர் தன் தோட்டத்தில் உள்ள கிணற்றை சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கருப்பதேவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக கிணற்றுக்குள்ளேயே இறந்துவிட்டார்.
அவரின் உடலை உத்தப்பநாயக்கனூர் போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
மற்றொருவர் பலி
அதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோழி தவறி விழுந்து விட்டது. இந்தக் கோழியை பிடிப்பதற்காக கவுண்டன்பட்டியை சேர்ந்த ஜெயம்(40) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அப்போதுளள அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் கிணற்றுக்குள் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி நகர் போலீசார் உசிலம்பட்டி தீயணைப்புத் துறை உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story