சாத்தியார் அணையை எம்.எல்.ஏ. ஆய்வு


சாத்தியார் அணையை எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2021 3:06 AM IST (Updated: 18 Nov 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

சாத்தியார் அணையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

அலங்காநல்லூர்
சாத்தியார் அணையை வெங்கடேசன் எம்.எல்.ஏ.  ஆய்வு செய்தார். 
அணையில் ஆய்வு
மதுரை பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணை முழுவதுமாக நிரம்பியது.. இதனால் அப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், அவை தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையன், விவசாய அணி நடராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் எம்.எல்.ஏ. விடம் மனு கொடுத்தனர். 
கோரிக்கை
அதில் சாத்தியார் அணையில் சுமார் 5 அடிக்கு மேல் மண் படிந்து உள்ளதை தூர்வாரி அணை முழு கொள்ளளவை எட்ட நடவடிக்கை எடுக்கவும், அணைக்கு நீர்வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என 11 கிராம பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

Next Story