ஓய்வூதியதாரர்களுக்காக 25-ந்தேதி குறைதீர்க்கும் முகாம்
தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்காக, குறைதீர்க்கும் முகாமை (பென்சன் அதாலத்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலகம் வருகிற 25-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு இணையவழியில் நடத்த உள்ளது.
சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்காக, குறைதீர்க்கும் முகாமை (பென்சன் அதாலத்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலகம் வருகிற 25-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு இணையவழியில் நடத்த உள்ளது.
சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியில் அனுப்பவேண்டும். இவ்வாறு அனுப்புபவர்கள் 'பென்சன் அதாலத்' என்று தலைப்பில் குறிப்பிட்டு, தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவேண்டும். குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொள்வதற்கு இணையவழியிலான ‘லிங்' அதாவது இணைப்பு, ஓய்வூதியதாரர்கள் கொடுத்த இணையதள முகவரி அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story