பாலாற்றில் மூழ்கி தொழிலாளி பலி
பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி பாலாற்றில் தவறி விழுந்து பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வாயலூர் பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தூண்டிலில் மீன் சிக்கிவிட்டதாக நினைத்து இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக தூண்டில் அறுந்து விழுந்ததில் அவர் பாலாற்றில் தவறி விழுந்தார். இதனால், ஆற்றில் இருந்த புதருக்குள் அவர் சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story