அத்திவரதர் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பியது
தொடர் கனமழையால் அத்திவரதர் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பி உள்ளது. பக்தர்கள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
அத்திவரதர் கோவில்
வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளம் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் தற்போது தண்ணீர் முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
அனந்தசரஸ் குளம் நிரம்பியது
வழக்கமாக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தற்போது அத்திவரதர் அனந்தசரஸ் கோவில் குளம் நிரம்பியதால் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து குளத்தில் நின்று புகைப்படம் எடுத்து சென்று மகிழ்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story