வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது


வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Nov 2021 6:32 PM IST (Updated: 18 Nov 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள காரணத்தால் 5 நாட்களுக்குப் பிறகு வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து நேற்று துவங்கியது.

வடகிழக்கு பருவ கனமழை பெய்ததாலும், ஆந்திர மாநில நீர்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வேலூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வந்த வெள்ள நீரால் காஞ்சீபுரம் மாவட்ட பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்தது.

காஞ்சீபுரம் மாவட்ட பாலாற்றில் அதிகரித்து வந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் உள்ள வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் பாலாற்று வெள்ள நீர் அதிக அளவில் சென்றதால் கடந்த 5 நாட்களாக தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக வாலாஜாபாத் சுற்றியுள்ள அங்கம்பாக்கம், அவளூர், ஆசூர், கண்ணடியன்குடிசை, தம்மனூர், கம்பராஜபுரம், இளையனார் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் காஞ்சீபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள காரணத்தால் 5 நாட்களுக்குப் பிறகு வாலாஜாபாத்-அவளூர் தரைப்பால சாலையில் போக்குவரத்து நேற்று துவங்கியது. காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியை அடைய 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்த கிராமப்புற மக்கள் தரைப்பாலத்தில் போக்குவரத்து துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story