திருவள்ளூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்


திருவள்ளூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2021 8:00 PM IST (Updated: 18 Nov 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் விரதத்துடன் ஆர்வமாக நேற்று முதல் மாலை அணிய தொடங்கினர்.

முதல் நாளன்று மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது பக்தர்களின் வழக்கம். இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பினும் நேற்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதல் பக்தியுடன் மாலை அணிந்தனர். 

திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் மாலை அணிவதற்காக, அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமியிடம் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.

Next Story