புதுச்சேரியில் மழை பாதித்த இடங்களில் முதல் மந்திரி ரங்கசாமி நேரில் ஆய்வு
புதுச்சேரியில் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை முதல் மந்திரி ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் அதிகாலை முதல் மாலை 3 மணி வரை 143 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் ரெயின்போ நகர், சோலை நகர், பெருமால்புரம், வில்லியனூர், கொசப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
புதுச்சேரியில் கனமழை காரணமாக இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை பாதித்த பகுதிகளை புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அவருடைய கார் சென்ற பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால், அதிகாரிகளுடன் வீதிகளில் சென்று மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story