புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
சாக்கடை வசதி
பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஈரோடு ரோட்டில் வண்ணாம்பாறை பகுதியில் இருந்து வெங்கமேடு வரை கழிவுநீர் வடிகால் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருந்துறை.
ஆபத்தான கிணறு
சத்தியமங்கலம் அருகே அரசூர் காலனியில் ஊர்கிணறு உள்ளது. அந்த கிணறு உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சுற்றுச்சுவர் இடிந்துவிட்டதால், யாரும் அருகில் செல்லாமல் இருப்பதற்காக குச்சிகள் போடப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் சிறுவர்-சிறுமிகள் விளையாடும்போது கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் கிணற்றை பராமரித்து சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசூர் காலனி.
குண்டும், குழியுமான சாலை
விஜயமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாண்டியன் நகர் பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாண்டியன்நகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
தாளவாடி திப்பு சர்க்கல் வீதியில் செல்லும் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாளவாடி.
மின்தடையால் பாதிப்பு
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம், ராமபயலூர், பீக்கிரிபாளையம், குளத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. பகல், இரவு நேரம் என்று பாராமல் 2 அல்லது 3 மணிநேரம் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள், தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சீரான மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சசிகுமார், சிக்கரசம்பாளையம்.
மண்பாதை தார்சாலையாகுமா?
பெருந்தலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு குட்டிபாளையத்தில் காலனி பகுதிக்கு செல்ல மண்பாதை உள்ளது. தொடர் மழையால் தற்போது சேறும், சகதியுமாக காணப்படும் இந்த பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகிறார்கள். எனவே குட்டிபாளையம் காலனி செல்லும் மண்பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலையாக மாற்ற மனது வைப்பார்களா?
ஹரிராஜ், மேற்குகுட்டிபாளையம்.
பாராட்டு
ஈரோடு ரங்கம்பாளையம் லட்சுமி கார்டன் மெயின் வீதியில் மின்சார கம்பிகளை உரசி செல்லும் மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால் சரியாக வெட்டாமல் ஒரு கிளை மின் ஒயரில் சிக்கியிருந்தது. அந்த வழியாக சென்ற பள்ளி வாகனங்கள் முதல் பெரும்பாலான வாகனங்கள் அதில் உரசியபடி சென்றன. ஆபத்தான இந்தநிலை குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய பணியாளர்கள் தொங்கிய மரக்கிைளயை அகற்றிவிட்டார்கள். இதுபற்றி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.
தி.சென்னிமலை, ரங்கம்பாளையம்.
Related Tags :
Next Story