அழகர்கோவிலில் சொக்கப்பனை தீபம்
அழகர்கோவிலில் சொக்கப்பனை தீபம்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று மாலையில் பவுர்ணமி நிறைவு நாளையொட்டி திருக்கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. இதில் சுந்தரராச பெருமாள் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. இதைதொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதன் பின் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. அதை தொடர்ந்து அழகர்மலை உச்சியில் 3,500 அடி உயரத்தில் இருக்கும் வெள்ளி மலையாண்டி கோவிலில் கோம்பை தளத்தில் கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அழகர்மலை அடிவாரத்திலும், சுற்று வட்டார கிராமமக்களும் மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபத்தை பார்த்து தீப தரிசனம் செய்தனர். மேலும் மேலூர் அருகே மேலவளவு பகுதியில் சோமகிரி மலை மீது பிரசித்தி பெற்ற கருப்பு கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story