புகார் பெட்டி
புகார் பெட்டி
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஊருணி கிராமத்தில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, டி.கல்லுப்பட்டி.
பூட்டி கிடக்கும் நூலகம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த புள்ளகவுண்டன்பட்டியில் பொது நூலகம் உள்ளது. இந்த நூலகம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளும், புத்தகம் வாசிப்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்.
மைக்கேல்ராஜ், புள்ளகவுண்டன்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகர் செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாைலயை சீரமைப்பார்களா?
அகிலா, திருமங்கலம்.
ஒலிபெருக்கி தேவை
ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நடைமேடையின் மேற்கு பகுதியில் ஒலிபெருக்கி இ்ல்லை. இதன் காரணமாக ரெயில்கள் வரும் அறிவிப்பை பயணிகளால் கேட்கமுடியவில்லை. பயணிகளின் நலன்கருதி அங்கு ஒலிபெருக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாநகராட்சி 30-வது வார்டு ராஜா தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்களும் அதிகஅளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை வில்லாபுரம், மணிகண்டன் நகரில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சந்துரு, மதுரை.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கள்ளக்குடி தெருவில் கடந்த சில நாட்களாக மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவார்களா?
பொதுமக்கள், திருப்பத்தூர்.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை தமிழ் சங்கம் சாலை, பேச்சியம்மன் படித்துறை சாலை ஆங்காங்கே ேமடு, பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.
Related Tags :
Next Story