வீட்டுக்குள் சேர்க்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
வீட்டுக்குள் சேர்க்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கோவிலூர் அம்மன் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். வேலு, கடந்த மாதம் அண்ணா சாலையில் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி, கடந்த 10-ந்தேதி விடுதலையானதாக கூறப்படுகிறது.
விடுதலையாகி வெளியே வந்த வேலு, கடந்த ஒரு வாரமாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் வேலுவை அவரது மனைவியும், பிள்ளைகளும் வீட்டுக்குள் சேர்க்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலு, நேற்று அதிகாலை தனது வீட்டின் வாசல் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story