செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் வன்னியர் சங்க தலைவர் ரமேஷ், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ், ஆகியோர் நேற்று கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஜெய்பீம் படக்குழுவினர் மீது தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜெய்பீம் திரைப்பட காட்சிகள் வன்னியர் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அந்த திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சூர்யா மற்றும் படத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திலும் செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாமல்லபுரம் நகர பாம.க. செயலாளர் ராஜசேகர், பா.ம.க. நிர்வாகிகள் சீனிவாசன், கோவிந்தசாமி, அரசியல் ஆறுமுகம், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.