மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு + "||" + Collector Inspection in Chengalpattu District

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊரப்பாக்கம் பெரிய ஏரியின் நீர் கொள்ளளவை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வடிகால்வாய் மூலம் மழை நீர் வெளியேறுவதை பார்வையிட்டு அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி நகரில் வடிகால் கால்வாய்கள் மூலம் மழைநீர் வெளியேறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,840 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,840 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,696 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,696 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,512 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,512 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.