சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோட்டூரில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் விழுந்தது
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுல்தான் பேட்டை பகுதிகளில் இரவு பலத்த மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் சற்று வெயில் அடித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் பகல் நேரத்தில் மழை பொழிவு இல்லை.
இருந்தபோதிலும் அவ்போது பலத்த காற்று வீசியது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே கோட்டூரில் சாலையோரத்தில் நின்றிருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரம் விழுந்ததால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதன் காரணமாக அந்த வழியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் ஆழியாறு அருகே 2-வது கொண்டை ஊசி வளைவில் லேசான மண்சரிவு ஏற்பட்டு மண், கற்கள் சாலையில் விழுந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவற்றை அகற்றினார்கள்.
நீர்வரத்து குறைந்தது
அதுபோன்று மழை குறைந்ததால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்தது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2521 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.
அதுபோன்று 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 1,445 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1648 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118.55 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story