கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்து அரசு பள்ளி மாணவி சாதனை
கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்து அரசு பள்ளி மாணவி சாதனை
கிணத்துக்கடவு
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திரு விழா போட்டிகள் சேலத்தில் நடந்தது. இதில் தமிழகம் முழுவ தும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 666 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் காண்கலைகள் முப்பரிமாண (மணல் சிற்பம்) போட்டியில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி கிருத்திகா கலந்து கொண்டார்.
இந்த போட்டி யில் அழகான மணல்சிற்பம் வரைந்த மாணவி கிருத்திகா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஓவிய ஆசிரியர், எஸ்.கவுசல்யா, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினார்கள்.
மாநில அளவில் முதல் இடத்தை பிடித்ததால் அவர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story