சிறுமியை கடத்திய வாலிபர் கைது


சிறுமியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2021 11:21 PM IST (Updated: 19 Nov 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

துடியலூர்

கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 23). தொழிலாளி. இவர் தனது சொந்த ஊரான ஊட்டிக்கு உறவினர்களை பார்ப்பதற்காக அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருக்கு 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், அந்த சிறுமியிடம் திரு மணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அன்னூருக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். 

இது குறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் சென்றது. அதன் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விஜயன், சிறுமியை கடத்தி திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து விஜயனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story