பள்ளி மாணவன் பலி


பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 20 Nov 2021 2:21 AM IST (Updated: 20 Nov 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

கார்-லாரி மோதல்; பள்ளி மாணவன் பலி

கொட்டாம்பட்டி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது விடுப்பில் இருந்த அவர் காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டாங்குடி அருகே வந்தபோது அந்த வழியாக லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமானது. காரின் இடிபாடுகளில் சிக்கிய மாணவன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், தீயணைப்புதுறையினர் நெடுஞ்சாலை ரோந்து ஊழியர்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story