3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனால் தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஈரோடு
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனால் தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சத்தியமங்கலம்
டெல்லியில் கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வந்தார்கள். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றதாக அறிவித்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச்செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.சுரேந்தர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.முருகன், இளைஞர் மன்ற தலைவர் சரவண குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
பவானி
இதேபோல் பவானியில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை தொடர்ந்து நகர தி.மு.க. சார்பில் பவானி-அந்தியூர் பிரிவு சாலையில் பவானி நகர கழக செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகர், நல்லசிவம், வர்த்தக அணி மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர பொருளாளர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கதிர்வேல், முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஆர்.துரை, வக்கீல் செந்தில் குமரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சித்தையன், சண்முகமணி, நகர மாணவரணி அமைப்பாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பவானி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வரதநல்லூர் ஊராட்சி மூன்ரோடு பிரிவில் பவானி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கா.சு. மகேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் பவானி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கார்ஜோன் சதீஷ் குமார் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கே.எம்.சத்தியமூர்த்தி, விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story