நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது; பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது; பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Nov 2021 2:32 AM IST (Updated: 20 Nov 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து குறைந்தது
தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 297 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரி நீராக 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் உபரி நீராக வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீரும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 104.21 அடியாக இருந்தது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 301 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 103.85 அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story