மொடக்குறிச்சி அருகே துணிகரம்: சித்த மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மொடக்குறிச்சி அருகே துணிகரம்: சித்த மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2021 2:36 AM IST (Updated: 20 Nov 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே சித்த மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை-ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே சித்த மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை-ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்த மருத்துவர்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் அருகே உள்ள தாசன்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் நாகலிங்கம் (வயது 47). இவர் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கமல சங்கரி (42). இவர்களுக்கு காயத்ரிதேவி (19), காவியா (17) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
அருள் நாகலிங்கம் மருத்துவமனை அருகே கடந்த 11 மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். அருள் நாகலிங்கம் நேற்று முன்தினம் மயிலாடுதுறைக்கு கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
நகை-பணம் காணவில்லை
இந்த நிலையில் நேற்று காலை 3 பேரும் சித்த மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்தபோது அதிலிருந்த 35 பவுன் நகை, ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 650-யை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்து,. உடனே இதுபற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளை
வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து அதிலிருந்த 35 பவுன் நகை, ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 650-யை திருடிக்கொண்டு் தப்பித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story