சித்தோடு அருகே பனியன் அரவை மில்லில் தீ விபத்து
சித்தோடு அருகே பனியன் அரவை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
பவானி
சித்தோடு அருகே பனியன் அரவை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
பனியன் அரவை மில்
ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அடுத்த பள்ளபாளையம் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 70). இவர் இந்தப் பகுதியில் பனியன் அரவை மில் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மில்லில் பனியன் கழிவு துணிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சு தயாரித்து மீண்டும் நூலாக திரித்து பனியன் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.
தீ விபத்து
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் மில்லில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பனியன் துணிகள் வைத்திருக்கும் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மின்கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழைய பனியன் கழிவு துணிகள் வைத்திருந்த மூட்டைகள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story